×

அவிநாசி தொகுதி வேட்பாளர் அதியமான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

அவிநாசி, மார்ச் 24: திமுக தலைமையிலான, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அவிநாசி(தனி) சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் அதியமான் நேற்று அவிநாசி ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  அப்போது வாக்காளர்களை நேரில் சந்தித்த வேட்பாளர் அதியமான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நேற்று காலை செம்பியநல்லூர் ஊராட்சியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கி கந்தம்பாளையம், ஸ்ரீநகர், செல்வபுரம், நாதம்பாளையம், வெள்ளியம்பாளையம், தாசம்பாளையம், ஆட்டையாம்பாளையம், எஸ்.மேட்டுபாளையம், பட்டறை, ஆண்டவர்காலனி,  எஸ்.பி.கார்டன், கருமாபாளையம், பாரதிநகர், கிருஷ்ணாபுரம், ஈசுவர்கோவில் கணேசபுரம், சின்னேரிபாளையம், நடுவச்சேரி, ராவுத்தம்பாளையம், சிலுவைபுரம், வலையபாளையம், கருக்கன்காட்டுபுதூர், மாரப்பம்பாளையம், கானாங்குளம், நல்லகட்டிபாளையம், புஞ்சைதாமரைக்குளம், பழையஊஞ்சல்பாளையம், துலுக்கமுத்தூர்நால்ரோடு, ஆலாம்பாளையம், குப்பாண்டாம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், வேலூர்பிரிவு, தண்ணீர்பந்தல், ஜீவாநகர், பெரியாயிபாளையம், பச்சாபாளையம், தேவம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், ரங்காநகர், இந்திராகாலனி, கமிட்டியார்காலனி, சந்தைக்கடை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் அவிநாசி சட்ட மன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் கோட்டைஅப்பாஸ், அவிநாசி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சிவப்பிரகாஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, ஆதித்தமிழர் பேரவை மாநில பொது செயலாளர் கோவை ரவிக்குமார், மாநில துணைச்செயலாளர் விடுதலைச்செல்வன், துலுக்கமுத்தூர் ஊராட்சித்தலைவர் வரதராஜன், திமுக மாவட்ட பிரதிநிதி எல்.ஐ.சி. அவிநாசியப்பன், காங்கிரஸ் கோபாலகிருஷ்ணன், சாயிகண்ணன், மதிமுக பாலு, சி.பி.எம். மாவட்ட செயற்குழு முத்துசாமி, ஒன்றியக்குழு பச்சாபாளையம் பழனிசாமி, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் இசாக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாரிசாமி ஆகியோர் உடன் சென்று வாக்குகளை சேகரித்தனர்.

ஜல்லிக்கட்டு கதாநாயகன் நானல்ல; மோடிதான்
உடுமலை, மார்ச் 24: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரே நேற்று இரவு உடுமலை அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன், பல்லடம் அதிமுக வேட்பாளர் ஆனந்தன், தாராபுரம் பாஜ வேட்பாளர் எல்.முருகன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச வாஷிங் மெஷின் மகளிரின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும்.மத்திய அரசு தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகளை வழங்கியுள்ளது. மதுரையில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை 6 மாத காலத்தில்  செயல்பாட்டுக்கு வரும்.ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்தபோது மெரினாவில் 15 லட்சம் பேர் போராடத் துவங்கினர். நான் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும்கூட ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென போராடத் துவங்கினர்.ஜல்லிக்கட்டு தடையை நீக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன். இதையடுத்து  பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் நான்கு துறைகளில் இருந்த தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தந்தார். எனவே ஜல்லிக்கட்டு கதாநாயகன் நானல்ல. பாரதப் பிரதமர் மோடியே ஜல்லிக்கட்டு கதாநாயகன் ஆவார். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

Tags : Avinashi ,Adiyaman Udayasooriyan ,
× RELATED கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு