×

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

அதிகரிப்புஊட்டி, மார்ச் 24: கடந்த ஆண்டு மார்ச் மாதம் ெகாரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. துவக்கத்தில், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்தே காணப்பட்டது. பின்னர், படிப்படியாக உயர துவங்கியது. ஜூன் மாதத்தில் கொரோனா தொற்று வேகம் எடுக்க துவங்கியது. தொடர்ந்து பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் படிப்படியாக குறைந்து கடந்த சில மாதங்களாக பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. ஆனால், தற்போது அண்டை மாநிலமான கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில். நீலகிரியிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10க்கும் மேல் செல்கிறது. நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. அதேசமயம், குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இது நீலகிரி மாவட்ட மக்களையும், அதிகாரிகளையும் அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.
தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் இன்றி சுற்றுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் அடிக்கடி கை கழுவதல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த இரு மாதமாக கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரு வாரமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுடன் இருப்பவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால், இது சமூக பரவலாகவோ, தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளாக இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களை கட்டாயம் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் மக்களிடம் தொடர்பு உள்ளவர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகளை விற்பனை செய்ய வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் விவசாயிகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nilgiris district ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்