திமுக., கூட்டணிக்கு ஏஐடியுசி., ஆதரவு

ஈரோடு, மார்ச் 24:  சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து ஏஐடியுசி., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.    ஏஐடியுசி., தொழிற்சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் ஈரோட்டில் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் சித்தையன் தலைமை தாங்கினார். ஏஐடியுசி., மாநில செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது, பா,ஜ, அ.தி.மு.க கூட்டணியை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற விடாமல் தடுப்பது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர், பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் காங்கேயம் தொகுதியில் சென்னிமலை பகுதியிலும் அதிமுக, பா.ஜ கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்கவும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற பாடுபடுவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் பவானிசாகர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிதி வசூலித்து தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ராசம்மாள், கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: