மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஈரோடு, மார்ச் 24:  ஈரோடு எஸ்.எஸ்.பி. நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் விழா வருகின்ற 30ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது. விழாவினையொட்டி காவிரி ஆற்றிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 31ம் தேதி காலை 7 மணிக்கு பொங்கல் விழா மற்றும் அக்னி சட்டி எடுத்து வருதல் ஆகியவை நடைபெற உள்ளது. 1ம் தேதி கம்பம் எடுத்து வரும் விழா நடைபெற உள்ளது. பின்னர் மாலையில் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளது.

Related Stories:

>