×

ஓசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

ஓசூர், மார்ச் 24: ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி பகுதி வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நல்லூர், அக்ரகாரம், பெத்த எலசகிரி, சித்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்கு சேகரித்தார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்துள்ள திட்டங்கள், பாலகிருஷ்ணரெட்டி அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட அரசு உயர் நிலைப்பள்ளி, சாலைகள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினார். மேலும், பல்வேறு திட்டங்களை கொண்டு வர அதிமுகவை ஆதரிக்க வேண்டும் எனகூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், இணை செயலாளர் ஜேபி(எ) ஜெயபிரகாஷ், துணை செயலாளர் முருகன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, பாகலூர் பஞ்., தலைவர் ஜெயராம் உள்ளிட்டோர் ஆதரவு திரட்டினர். ஓசூர் தொகுதியை பொறுத்தவரை தெலுங்கு மொழி பேசக்கூடியவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதேபோல், கன்னடம், தமிழ் பேசக்கூடிய மக்களும், இந்தி பேசக்கூடிய வடமாநிலத்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால், வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசி ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

Tags : AIADMK ,Hosur constituency ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...