×

எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி

தர்மபுரி, மார்ச் 24: தர்மபுரி மாவட்ட திமுக வேட்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி (தர்மபுரி), இன்பசேகரன் (பென்னாகரம்), பி.கே. முருகன் (பாலக்கோடு), பிரபு ராஜசேகர் (பாப்பிரெட்டிப்பட்டி), கூட்டணி கட்சி வேட்பாளர் சிபிஎம் குமார் (அரூர்) ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை தர்மபுரி நான்கு ரோடு அண்ணாசிலை அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உங்களிடம் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்ல நான் வரவில்லை. உங்களோடு எல்லா நேரத்திலும் உணர்வோடும் இருப்பவன். இந்த தேர்தலில் உங்கள் வாக்கை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு பதிவு செய்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடும் தடங்கம் சுப்ரமணியனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். பென்னாகரம் தொகுதி வேட்பாளர் இன்பசேகரன், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பிரபு ராஜசேகர், பாலக்கோடு தொகுதியில்  போட்டியிடும் பிகே முருகன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அரூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குமாருக்கு சுத்தியல் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

  அதியமான் வாழ்ந்த இந்த பூமிக்கு இந்த ஸ்டாலின் வந்து ஆதரவு கேட்க வந்துள்ளேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தந்த இந்த ஸ்டாலின் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பொறுப்பு ஏற்று உயர்கல்வித்துறைக்கு ஏதாவது செய்துள்ளாரா, தொகுதிக்கு ஏதாவது செய்தாரா, மாவட்டத்திற்கு ஏதாவது செய்தாரா, ஒன்றும் செய்யவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சராக என்ன சாதித்தார். ஒன்றும் இல்லை.  அலியாளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டுவருவோம் என்று கூறி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தண்ணீர் கொண்டு வந்தாரா? இல்லை. தர்மபுரி தொழில்பேட்டை என்ன ஆச்சு, எண்ணேகோல்புதூர் திட்டம் என்ன ஆச்சு? ஒன்றும் நடக்கவில்லை. தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவில்லை. தொகுதிக்கு ஒன்றும் செய்ய வில்லை, மாவட்டத்துக்கும் ஒன்றும் செய்யவில்லை. இவர் மட்டுமல்ல,எல்லா அமைச்சர்களும் இப்படித்தான் உள்ளனர்.   காவிரி ஆணையம் அமைத்து மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். குடிமராமத்து நடத்தி மணல் கொள்ளை நடத்தி உள்ளார். கரும்பு டன்னுக்கு 200 மானியமாக வழங்கி இருந்தது. ஆனால் ரூ.137 குறைத்து விட்டார். அதிமுக அரசு ஒரு அடிமை அரசு. விவசாயிக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்துள்ளது. ஆதரவு தெரிவித்த அதிமுகவை நீங்கள்தான் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த ஆட்சியை பற்றி எளிமையாக  சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆட்சி பொல்லாத ஆட்சி. இதற்கு சாட்சி தான் பொள்ளாச்சி. எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி. திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகன். சொல்வதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Edappadi Palanisamy ,
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்