×

தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை

பாலக்கோடு, மார்ச் 24: பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் அன்பழகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் கும்மனூர் ஊராட்சி பகுதியில் பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து பஞ்சப்பள்ளி ஊராட்சி, சிடி பெட்டம், சாமானுர், எம்.செட்டிஅள்ளி, மாரண்டஅள்ளி, கும்மனூர், எம்ஜிஆர் நகர், குண்டன் தரிசு, எக்காண்டஅள்ளி, பசிகம், பாளையம், கரகூர், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாரண்டஅள்ளி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தூள் செட்டி ஏரி பணிகள் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் தூள்செட்டி ஏரி கால்வாய் வெட்டுவதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும். எண்ணேகொல் புதூர் கால்வாய் திட்ட பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டது. மாரண்டஅள்ளி மற்றும் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், தென்பெண்ணை ஆற்றில் இருந்து உறுதியாக தண்ணீர் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க தலைவர் தொமு.நாகராஜன், தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் வெங்கட்ராமன், பாமக ஒன்றிய செயலாளர்கள் குமார், சரவணன், பாஜக ஒன்றிய செயலாளர் கருணாகரன், மாரண்டஅள்ளி முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Southern River ,
× RELATED தடுப்பணையை உடைத்து தென்பெண்ணை...