திருத்துறைப்பூண்டி அருகே இன்று சொர்ணபுரீஸ்வரர், அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 24: திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோயில், பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. காலை 6 முதல் 7.30க்குள் கற்பவிநாயகர், கண்டப்ப அய்யனார், மன்மத சுவாமி, வீரபக்த ஆஞ்சநேயர், பூர்ணா புஷ்கலாம்பிகா உடனமர் தர்மசாஸ்தா, தூண்டிக்கார அய்யா, நெமிலிபாலாம்பிகா, மாரியம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ராஜ்திலக், நிர்வாக அதிகாரி முருகையன் மற்றும் கிராமவாசிகள் செய்துள்ளனர். இதில் சர்வாலய உழவார பணிக்குழு சார்பில் கபசுர குடிநீர் முக கவசம் வழங்கப்படுகிறது.

Related Stories:

More