×

திருவையாற்றில் நந்தியம்பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம்

திருவையாறு, மார்ச் 24: திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சியில் நேற்று நந்தியம்பெருமான் பிறப்பு விழா புராண காலத்தில் இருந்து தொன்றுத்தொட்டு ஆண்டுதோறும் மிகவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனையடுத்து இந்த ஆண்டும் மிக விமர்சையாக நடைபெற்றது. கடந்த 22ம் தேதி காலை நந்தியபெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால் போன்ற திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு அறம்வளர்த்தநாயகி உடனாகிய அய்யாறப்பர் ஆலயத்தில் நந்தியம் பெருமானுக்கும் பட்டாபிஷேகத்தில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தல் வீதியுலாகாட்சி நடைபெற்றது. நேற்று (23-ம் தேதி) காலை 6 மணியளவில் அய்யாறப்பர் அம்பாள், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளைகோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் முழங்க திருவையாறில் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழாபாடிக்கு சென்றார். வழி நெடுகிழும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதன் சுவாமி கோயிலில் இரவு நந்தியம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

நந்திபார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள் அதனை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் பக்தர்கள், பொதுமக்கள மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிறகு சாமிபுறப்பட்டு திருவையாறை வந்தடையும். விழா ஏற்பாடுகளை தருமபுரஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் தருமபுர ஆதினம் மத் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Tirukkalyana ,Nandiyamperuman ,Thiruvaiyar ,
× RELATED திருவையாறு கோயிலில் சித்திரை...