×

திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

திருமயம்,மார்ச்.24: திருமயம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 9ம் தேதி பூசொhpதல் விழா, 15ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் முதல்நாள் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சமூகத்தினாின் மண்டகபடி திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அம்மன் வீதிஉலா, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் 9ம் திருவிழாவையொட்டிநேற்று காலை முதலே திருமயம், மணவாளன்கரை,கடியாபட்டி, கோட்டையூர், ஆயிங்குடி, குளத்துப்பட்டி, ஊனையூர், மேலூர் அரசம்பட்டி, மகமாயிபுரம், முடுக்குப்பட்டி, சித்தளஞ்சாபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பால்குடம், மயில்காவடி, அலகு காவடி, பறவைக் காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து மாலை 5மணியளவில் கரகம் எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண் பக்தர் ஒருவர் அம்மன் வேடமிட்டு திருமயம் வேங்கை கண்மாயில் இருந்து கையில் வாளுடன் தலையில் கரகம் சுமந்தபடி கரகத்தை கையில் பிடிக்காமல் திருமயம் கடைவீதி, காசிவிஷ்வநாதா; கோயில், மணவாளன்கரை வழியாக ஊர்வலமாக வந்து இளஞ்சாவூர் முத்துமாரி அம்மன் கோயிலை அடைந்தது. அப்போது கரகம் சுமந்து செல்பவரை ஏராளமான பக்தர்கள் பின் தொடர்ந்து அவாிடம் ஆசி பெற்றனர்.

இறுதியில் கோயில் வாசலில் கரகத்தில் கத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதிகயில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். இதனிடையே மாலை 6 மணியளவில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளாமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நேர்த்திகடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக திருமயம், ராயவரத்தில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. விழாவின் கடைசி நாளான இன்று(24ம் தேதி) சப்தாபாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags : Ilanjavur Muthumariamman Temple Panguni Festival ,Thirumayam ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...