மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி உறுதி

பொன்னமராவதி,மார்ச்24: பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் இரண்டாவது நாளாக நேற்று திருமயம் தொகுதி திமுக வேட்பாளர; ரகுபதி வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார;.திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் உள்ள ஆத்தங்காட்டில் தொடங்கி திருநாட்டாம்பட்டி, வாழைக்குறிச்சி, கோவனூர், சுந்தரம்,செம்பூதி, காரையூர், வௌ்ளகுடி, அரசமலை உள்ளிட்ட 25இடங்களில் வாக்குகள் கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை திமுக ஆட்சி அமைந்தவுடன்அனைவருக்கும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் காரையூர் காவல்நிலையம் இலுப்பூர் உட்கோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை மீண்டும் பொன்னமராவதிக்கு கொண்டவரப்படும்.

தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்கவேண்டும் என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராம.சுப்புராம்,உதயம்சண்முகம், திமுக ஒன்றியச்செயலாளர்கள் முத்து, அடைக்கலமணி,மாவட்டதுணைச்செயலாளர் சின்னையா, பொதுக்குழுஉறுப்பினர் தென்னரசு, நகரச்செயலாளர் அழகப்பன், வட்டாரக்காங்கிரஸ் தலைவர் குமார், மாவட்டதுணைத்தலைவர் ராஜேந்திரன், இந்தியகம்யூனிஸ்ட்கட்சி மாநிலக்குழு ஏனாதி ராசு, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச்செயலாளர் பக்ருதீன், திமுக நிர்வாகிகள் காசிபொற்செல்வன், ஆலவயல்முரளிசுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>