×

பாடாலூரில் திமுக சார்பில் கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு

பெரம்பலூர், மார்ச் 24: எம்.பி., கனிமொழிக்கு, பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூரில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தில் எம்.பி., கனிமொழி இன்று (24ம்தேதி) குன்னம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து காலை 11 மணிக்கு பிரசாரம் செய்கிறார். பின்னர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட ஆண்டிமடத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதனையொட்டி நேற்று மாலை திருச்சியிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்து வந்த எம்.பி., கனிமொழிக்கு, பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூரில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் உற் சாக வரவேற்பளித்தனர்.

Tags : Kanimozhi ,DMK ,Badalur ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...