பெரம்பலூர் தாலுகா வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா? மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

பெரம்பலூர்,மார்ச் 24: பெரம்பலூர் தாலுகாவில் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை வசதிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் சட்டமன்றத்தொகுதியில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்கள் மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள குறிப்பிட்ட சிலகிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் 428 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வருகிற, ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன்படி நேற்று பெரம்பலூர் தாலுகாவில் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் திரவிய சகாய மானியத் தொடக்கப்பள்ளி, வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளி, பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர்நல நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமையவுள்ள காட்டிடங்களில், மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது அந்த கட்டிடங்களில் மின்சார வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதிகள் உள்ளனவா என பார்வையிட்டு ஆய்வுசெய்தார். வாக்குச்சாவடி மையத்திற்குத் தேவையான பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பெரம்பலூர் தொகுதிக்கான முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் சின்னதுரை, தேர்தல் துணை தாசில்தார் சர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>