காருடையாம் பாளையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம்

க.பரமத்தி, மார்ச்.24: க.பரமத்தி ஒன்றியம் புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காருடையாம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கிராம சுகாதார செவிலியர் கவிதா வரவேற்றார். புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லாவண்யா தலைமை வகித்து பேசியதாவது அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரேனா தொற்றை ஒழிக்க இயலாது.

எனவே முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் முடிந்தவரை கப சுர குடிநீர் அருந்துவதோடு சமூக இடைவெளியை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் அத்தோடு வீடுகளைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்றார்.முகாமில் மருத்துவகுழுவினரால் பொதுமக்களுக்கு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மாத்திரைகளும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

Related Stories:

>