ஆன்லைன் புது வணிகத்தை நிறுத்தக்கோரி எல்ஐசி முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

குளித்தலை, மார்ச் 24: இந்தியா முழுவதும் எல்ஐசி நிறுவனத்தில் ஆன்லைன் புது வணிகம் நிறுத்த வேண்டும் பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் பாலிசி கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் முகவர்கள் பெரும் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும் பாலிசிக்கான கமிஷன் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் முகவர்கள் எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

குளித்தலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை எல்ஐசி முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி செயலாளர் வல்லம் கணேசன் பொருளாளர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தனர் தஞ்சை கோட்ட முகவர் சங்க செயலாளர் பொன் கணேசன் இந்த ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார் இதில் எல்ஐசி முகவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>