ஏழை, எளிய மக்கள் பயன்பெறும்வகையில் இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்படும்: திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கரூர், மார்ச்24: கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கரூர் நகராட்சிக்குட்பட்ட மத்திய நகரப்பகுதிகளான கோபாலபுரம், சேர்மன் ராமானுஜம் தெரு, வடக்கு முருகநாதபுரம், தெற்கு முருகாநாதபுரம், மேற்கு மற்றும் வடக்கு மடவளாகம், சன்னதி தெரு, பங்களா தெரு, போலீஸ் லைன், அன்சாரி தெரு, காசீம் தெரு, கரிக்கடை சந்து, நீலிமேடு மெயின்ரோடு, பூ மார்க்கெட் போன்ற 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று காலை 8மணி முதல் 12.30மணி வரையிலும், வாங்கல் குப்பிச்சிபாளையம் ஊராட்சி பகுதிகளான மாரிகவுண்டம்பாளையம், கோப்பம்பாளையம், புதுத்தோட்டம், கணபதிபாளையம், குப்பிச்சிபாளையம், சுப்பிரமணியபுரம், கோட்டைமேடு, சானாங்கோட்டை, தவிட்டுப்பாளையம், அக்ரஹாரம், வாங்கல் கடைவீதி, கருப்பம்பாளையம், ஓடையூர் போன்ற 15க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு மாலை முதல் இரவு வரையிலும் வீடு வீடாக சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் வரவேற்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது, செந்தில்பாலாஜி பேசியதாவது: கரூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றம் செய்யப்படும். திமுக தலைவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான வழக்கறிஞர்களை கொண்டு இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்படும். குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் அமைந்துள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும். இவை அனைத்தும் உங்களுக்கு கிடைத்திட பொதுமக்களாகிய நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். இந்த பிரசார நிகழ்வில், கரூர் திமுக மத்திய நகரப் பொறுப்பாளர் கனகராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

Related Stories:

>