ராஜபாளையம் தொகுதியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை பெற்று தர நடவடிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுதி

ராஜபாளையம், மார்ச் 23: ராஜபாளையம் தொகுதியில் தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை பெற்று தருவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுதி அளித்தார்.  ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான் 10 ஆண்டுகளாக அமைச்சராக உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலம் உட்பட ஏராளமான பணிகளை கொண்டு வந்துள்ளேன். ராஜபாளையம் பகுதியில் அனைத்து கண்மாய்களையும் தூர்வாரியதால் நிரம்பியுள்ளன. தொகுதியில் ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம் நடத்தி, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுப்பேன். பட்டாசு, தீபெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி அதிகமாக போட்டபோது முதல்வர், மத்திய அரசிடம் எடுத்துக்கூறி ஜிஎஸ்டி வரியை குறைத்து பட்டாசு, தீப்பெட்டி தொழிலை காப்பாற்றினேன். நகரில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டிப்போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும். ராஜபாளையம் தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன்’ என்றார். பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>