×

சேத்தூர் பேரூராட்சி குடிநீர் பிரச்னை தீர்க்க சாஸ்தாகோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் ராஜபாளையம் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் வாக்குறுதி

ராஜபாளையம், மார்ச்  23: சேத்தூர் பேரூராட்சி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என, ராஜபாளையம் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் உறுதியளித்தார்.
ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன்  எம்எல்ஏ, சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதில் பேசிய தங்கப்பாண்டியன், ‘‘ராஜபாளையம் தொகுதியில் நகரம், பேரூராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து போர்வெல் அமைத்து குடிநீர் பிரச்சனையை தீர்த்துள்ளேன். ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவந்ததுபோல் சேத்தூர் பேரூராட்சியின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண புதிய சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படும். சேத்தூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி பேரூராட்சியின் அனைத்து இடங்களிலும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராசா அருண்மொழி,  பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை செயலாளர் வேலு, பொறுப்பாளர்கள் சண்முகசுந்தரம் மகேஸ்வரபாண்டியன், குருசாமி, இந்திரஜித், இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam DMK ,Thangapandian ,Sastago ,Chethur ,
× RELATED பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான...