தேவாரம் அருகே உரிய ஆவணம் இல்லாத ₹1.50 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி

தேவாரம், மார்ச் 23: தேவாரம் அருகே, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலையொட்டி, கம்பம் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தினசரி பறிமுதல் செய்து வருகின்றனர்.இதனடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி கதிரேஷ்குமார் தலைமையில் நேற்று காலை தேவாரம்-மல்லிங்காபுரம் மாநில நெடுஞ்சாலையில், வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், கோம்பையைச் சேர்ந்த ஈஸ்வரன் (31) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தி ஐநூறு கொண்டு வந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை உத்தமபாளையம் சார்நிலை கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ‘ஈஸ்வரன் தன்னிடம் இருந்த சரக்கு ஆட்டோவை விற்று பணம் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

Related Stories: