×

கேரளாவில் சீஷன் முடிந்தது ஏலத்தோட்டங்களில் வேலை இல்லை

கம்பம், மார்ச் 23: கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களில் வேலையில்லாததால் தமிழக தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களில் வேலைக்காக, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருது தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஜீப்புகளில் வேலைக்கு சென்று வருகின்றனர். ஏலச்செடிகளுக்கு கவாத்து வெட்டுதல், பராமரித்தல், களை எடுத்தல் ஆகிய வேலைகளுக்கு தமிழக பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 5 மணிக்கு ஜீப் மூலம் கேரளா செல்லும் பெண்கள் மதியம் 1 மணி வரை அப்பகுதி தோட்டங்களில் வேலை செய்து திரும்புகின்றனர். இதற்காக இவர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.300 வரை வழங்கப்படுகிறது. வருடத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் மே மாத இறுதியில் தொடங்கும் இந்த வேலை தொடர்ந்து 8 மாதங்கள் வரை நீடிக்கும். அதன் பின் பருவ மழையை எதிர்பார்த்து ஏல விவசாயிகள் ஏலச்செடியில் எவ்வித பணியும் செய்ய மாட்டார்கள். நடப்பு மாதத்தில் கடந்த வாரம் வரை ஓரிரண்டு இடங்களில் மட்டுமே ஏலத்தோட்ட பணி இருந்தது. ஆனால், இப்போது ஏலத்தோட்ட வேலை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பொதுமக்கள் கைகளில் பணப்புழக்கம் இன்றி வறட்சியுடன் காணப்படுகின்றனர்.

Tags : Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு