சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியில் 67 வேட்பாளர்கள் போட்டி சின்னங்களும் வெளியீடு

சிவகங்கை, மார்ச் 23:  சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 26 பேர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 5 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.குணசேகரன், அதிமுக சார்பில் பிஆர்.செந்தில்நாதன், அமமுக சார்பில் அன்பரசன், மநீம சார்பில் நேசம் ஜோசப், நாதக சார்பில் மல்லிகா மற்றும் சுயேட்சைகள் உள்பட 15பேர் களத்தில் உள்ளனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 26 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் 9மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4பேர் மனுவை வாபஸ் பெற்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாங்குடி, பிஜேபி சார்பில் எச்.ராஜா, அமுமுக சார்பில் தேர்போகி பாண்டி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13பேர் களத்தில் உள்ளனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் 8மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றார். திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன், அதிமுக சார்பில் மருது அழகுராஜ், அமமுக சார்பில் உமாதேவன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 26பேர் களத்தில் உள்ளனர்.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 20 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து திமுக சார்பில் தமிழரசி ரவிக்குமார், அதிமுக சார்பில் நாகராஜன், அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13 பேர் களத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 107 மனுக்களில் 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 77 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 10 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இறுதியாக 67 பேர் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக திருப்பத்தூர் தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் என்ற அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வரிசை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>