×

பரமக்குடி தொகுதியிலுள்ள வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பரமக்குடி, மார்ச் 23:  பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை தேவைகள் குறித்து தேர்தல் பார்வையாளர் விசோப் கென்யே ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி, நயினார்கோவில், பரமக்குடி நகர் மற்றும் கமுதி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளிலும் மொத்தம் 357 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் அடிப்படை வசதிகள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் உள்பட பல்வேறு வகையில் ஆய்வு செய்வதற்காக தேர்தல் பார்வையாளர் விசோப் கென்யே வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார். 13 வாக்குச்சாவடி மையங்களில் பார்வையிட்ட பின்பு, பரமக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி தங்கவேலுவிடம் ஆலோசனை நடத்தினார். அவருடன் தேர்தல் பார்வையாளரின் உதவியாளர் தாாசில்தார் செய்யது முகம்மது மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

Tags : Paramakudi Constituency ,
× RELATED பரமக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர்...