தெரு விளக்குகள் எரியாமல் இருளடைந்த ராமேஸ்வரம் நகர் பகுதி

ராமேஸ்வரம், மார்ச் 23:  ராமேஸ்வரம் நகர் பகுதியில் பல பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் இருளடைந்து காணப்படுகிறது. திருட்டு பயம் இருப்பதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் கோயிலை மையப்படுத்தி அமைந்திருக்கும் தெருக்கள் தவிர பேருந்து நிலையம், நகரின் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள், சுற்றியுள்ள கிராமங்கள் என பல பகுதிகள் உள்ளது. இவற்றில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் அப்பகுதியே இருளடைந்து காணப்படுகிறது. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் துவங்கி நகருக்குள் வரும் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி நிர்வாகத்தினால் அமைக்கப்பட்ட ஏராளான மின்கம்பங்களில் ஒரு சில தவிர பொருத்தப்பட்ட விளக்குகள் அனைத்தும் எரியவில்லை. இப்பகுதியில் மக்கள் அதிகளவில் குடியிருக்கும் தெருக்களிலும் மின்விளக்குள் எரியவில்லை. இதுபோல் நகரின் முக்கிய பிரதான சாலைகள் தவிர மற்ற இடங்களிலும் இரவு நேரத்தில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் எரியாமலும், தேவையான இடங்களில் தெருவிளக்குகளே பொருத்தப்படாத நிலையும் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இபபகுதிகள் இருளடைந்து காணப்படுவதால் இரவு 8 மணிக்கு மேல் தெருக்களில் பெண்கள், குழந்தைகள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர்.

மேலும் மக்கள் குடியிருப்பு பகுதிகள் இருட்டாக இருப்பதால் இதனை பயன்படுத்தி கொண்டு திருடர்களும் அவ்வப்போது தங்களது கை வரிசையை காட்டி வருகின்றனர். தெருப்பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் நலன் கருதி மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்துவது, எரியாத விளக்குகளை மாற்றுவது போன்ற பணியில் நகராட்சி ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். ராமேஸ்வரம் வரும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் சென்று திரும்பும் முக்கிய சாலைகளில் மட்டும் தெருவிளக்குகள் சரியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே நகராட்சி நிர்வாகமும் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் நலன் கருதி ராமேஸ்வரம் நகர் பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள எரியாத தெருவிளக்குகளை எரியவைப்பதற்கும், தேவையான இடங்களில் புதிய தெருவிளக்குகள் பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>