×

ராமநாதபுரம் தொகுதியில் 19 பேர் போட்டி

ராமநாதபுரம், மார்ச் 23:   ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 38 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற கடைசியான நேற்று 4 பேர் தங்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்றனர். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் 19 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். திமுகவை சேர்ந்த காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம், பாஜக குப்பு ராமு, நமது மக்கள் கட்சி அமுதன், நாம் தமிழர் இளங்கோ, மக்கள் நீதிமய்யம் கே.பி.சரவணன், அமமுக ஜி.முனியசாமி, பகுஜன் திராவிட கட்சி வில்ஹெம் பெஞ்சமின் ஆனந்த், மை இந்தியா கட்சி ஜெயபிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சுயேட்சைகளாக 10 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...