×

பிரசாரத்தின் போது ஆரத்தி எடுக்க பணம் தந்தால் கடும் நடவடிக்கை உசிலம்பட்டி ஆர்டிஓ எச்சரிக்கை

உசிலம்பட்டி, மார்ச் 23: உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்புமனு வாபஸ் பெறும் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் ஜோதியாதவ், ஆர்டிஓ ராஜ்குமார் தலைமை வகிக்க, தாசில்தார்கள் விஜயலட்சுமி சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதும், மீதியுள்ள அதிமுக, திமுக கூட்டணி பார்வட்பிளாக், அமமுக உள்பட 14 பேர் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் ஆர்டிஓ பேசுகையில், ‘பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் ஆரத்தி எடுக்க பணம் போட்டால் அது எந்த கட்சியாக இருந்தாலும், எந்த வேட்பாளர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பிரதாயம் என்பது பணம் கொடுப்பதில் காட்டக்கூடாது.  தேர்தல் விதிமுறைகளை மீறும் போது, சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள். எனவே பொது இடங்களில் பேனர்கள், போஸ்ட்டர் ஒட்டக்கூடாது, வாக்குச்சாவடிகளை வேட்பாளர்கள் முன்கூட்டியே பார்த்து கொள்ளலாம். பொதுமக்கள் தேர்தல் சம்மந்தமாக எந்த புகாராக இருந்தாலும் பொதுத்தேர்தல் அதிகாரியிடம் தைரியமாக கூறலாம்’ என்றார்.

Tags : Usilimbati ,RTO ,arathi ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு