திருமங்கலம் தொகுதியில் சுயேட்சைகளுக்கு குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு

திருமங்கலம், மார்ச் 23: திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் 4 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். மீதமுள்ள 24 பேர்களில் அங்கீகாரம் பெற்ற கட்சிகளை சோ்ந்தவர்களை பிற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரியான சவுந்தர்யா அறிவித்தார். இதில் சுயேட்சை வேட்பாளர்கள் அழகர்சாமி, முத்துவேல்ராஜா ஆகியோர் தங்களது ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 2 வேட்பாளர்களும் ஒரே சின்னத்தை கேட்டதால் குலுக்கல் முறையில் சின்னத்தை தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். குலுக்கல் சீட்டில் 2 வேட்பாளர்களின் பெயர்களையும் எழுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் சின்னத்தை தேர்வு செய்தார். இதில் முத்துவேலுராஜாவுக்கு ஆட்டோ சின்னம் கிடைத்தது. அழகர்சாமிக்கு கிரிக்கெட் பேட் சின்னத்தை ஒதுக்கினர். இதனை 2 வேட்பாளர்களும் ஏற்று கொண்டனர்.

Related Stories:

>