மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் விபரம்

மதுரை, மார்ச் 23: மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது.  தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, அமமுக, பாஜ மற்றும் சுயேட்சைகள் உள்பட 293 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 20ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் 97 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 196 மனுக்கள் ஏற்கப்பட்டன. தொடர்ந்து வேட்பு மனு வாபஸ் பெறுவது நேற்று கடைசி நாளாகும். இதில் மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளில் சிலர் மனுக்கள் வாபஸ் பெற்றனர். கடைசியாக அரசியல் கட்சியினர் உள்பட 179 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 1- தொகுதிகளி–்ல உசிலம்பட்டி தொகுதியில் குறைந்த வேட்பாளர்களாக 14 வேட்பாளர்களும், அதிகபட்சமாக திருமங்கலத்தில் 24 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விபரம்:

  * மேலூர் தொகுதி: 1. ரவிச்சந்திரன்(காங்), 2.பெரியபுல்லான்(அதிமுக), 3.செல்வராஜ்(அமமுக), 4.கதிரேசன்(மநீம), 5.கருப்பசாமி(நாம் தமிழர் கட்சி). 6.தினகரன்(சுயே), 7.நாகேந்திரன்(சுயே), 8. பாலன்(சுயே), 9.பாண்டி(சுயே), 10.தர்மர்(சுயே), 11.செந்தில்ராஜ்(மைஇந்தியா பார்ட்டி), 12.செல்வம்(சுயே), 13.சிவசாமி(சுயே), 14.கோபாலகிருஷ்ணன்(சுயே), 15.கண்ணன்(சுயே).

 * மதுரை கிழக்கு: 1.மூர்த்தி(திமுக). 2.கோபாலகிருஷ்ணன்(அதிமுக), 3.சரவணன்(அமமுக), 4.பிரபாகரன்(பகுஜன்) 5.முத்துகிருஷ்ணன்(மநீம), 6.லதா(நாம்தமிழர்கட்சி), 7.ராஜா(மை இந்தியா பார்ட்டி), 8.பாலமுருகன்(புதிய தமிழகம்), 9.முத்துகிருஷ்ணன்(அனைத்திந்திய மக்கள் புரட்சி கழகம்), 10.பழனியம்மாள்(சுயே), 11.சந்திரசேகரன்(சுயே), 12.திணேஷ்(சுயே), 13.ஜெயக்குமார்(சுயே), 14.காந்தி(சுயே), 15.முஸ்டாக்முகமது(சுயே).

 * சோழவந்தான்: 1. வெங்கடேசன்(திமுக),  2.மாணிக்கம் (அதிமுக), 3.ஜெயலட்சுமி(தேமுதிக), 4.மோகநாதன்(மநீம), 5.சேதுராமன்(புதிய தமிழகம்), 6.கந்தவேல்(சுயே), 7.கிருஷ்ணசாமி(சுயே), 8.மூர்த்தி(சுயே), 9.வரதராஜன்(சுயே), 10. தனகோபால்(சுயே), 11.மூர்த்தி(சுயே), 12.வெற்றிவேல்(சுயே), 13.மலைச்சாமி(சுயே), 14.கதிரேசன்(சுயே), 15.ராஜ்குமார்(மைஇந்தியா பார்ட்டி), 16. ஈஸ்வரி(லெனினிஸ்ட்), 17.சேகரன்(சுயே), 18.சிலம்பரசன்(பகுஜன்), 19.ராஜ்குமார் (சுயே), 20.செங்கண்ணன்(சுயே), 21.மருதையா(சுயே). 22.பி.மூர்த்தி(சுயே), 23. யோகநாதன்(சுயே).

* மதுரை வடக்கு: 1.கோ.தளபதி(திமுக), 2.டாக்டர் சரவணன்(பாஜ), 3.ஜெயபால்(அமமுக), 4.அழகர்(மநீம), 5.அன்பரசி(நாம் தமிழர்), 6.வசந்தகுமார்(அண்ணாதிராவிடகழகம்), 7.சென்னாநடராஜன்(சிவசேனா), 8.கேசவராஜா(சுயே), 9.இஸ்மாயில்(சுயே), 10.அபுபக்கர் சித்திக்(சுயே), 11.தெய்வம்மாள்(சுயே), 12.ராமவிஸ்வகர்மா(சுயே), 13.குப்புச்சாமி(சுயே), 14.வால்டர்(லெனின்பார்ட்டி), 15.சங்கரபாண்டி(சுயே).

* மதுரை தெற்கு: 1. பூமிநாதன்(திமுக-மதிமுக) 2.சரவணன் (அதிமுக), 3.ராஜலிங்கம்(அமமுக), 4.சுரேஷ் ராஜ்குமார்(சமக), 5.ஈஸ்வரன்(மநீம), 6.சதாம் உசேன்(மைஇந்தியா), 7.உமேஸ்(சுயே), 8.ரவிச்சந்திரன்(சுயே), 9.ஜெயா(சுயே), 10.ஆகாஷ்(சுயே), 11.சரவணன்(சுயே), 12.ரமேஷ்(சுயே), 13. வெங்கடஜலபதி(சுயே), 14.ராஜ்குமார் என்ற மணிகண்டன்(சுயே), 15.பாரதி கண்ணம்மா(சுயே).

* மதுரை மத்தி: 1. பழனிவேல்தியாகராஜன்   (திமுக), 2. ஜோதி முத்துராமலிங்கம்(அதிமுக), 3.சிக்கந்தர்பாட்சா(எஸ்டிபிஐ), 4.தவமணி(பகுஜன்), 5.மணி(மநீம), 6.பாண்டியம்மாள்(நாம்தமிழர்), 7.ரஜேஷ்கண்ணா(சுயே), 8.சத்தியேந்திரன்(சுயே), 9.ராஜசூர்யா(சுயே), 10.சிவசங்கர்(சுயே), 11. கிரம்மர்சுரேஷ்(சுயே), 12.இளங்கோவன்(சுயே), 13.வீரதுரை(சுயே), 14.கிருஷ்ணபிரபு(சுயே), 15.ராஜ்குமார்நாயுடு(சுயே), 16.அவந்திநாதன்(சுயே), 17.ஈஸ்வரி(சுயே), 18.கிருஷ்ணன்(சுயே), 19,முஜிபூர்ரகுமான்(சுயே), 20.பார்வதிதேவி(சுயே).

 * மதுரை மேற்கு: 1.சின்னம்மாள் (திமுக), 2.ராஜூ (அதிமுக),  3.பாலசந்திரன்(தேமுதிக), 4.முனியாசாமி(மநீம), 5.வெற்றிக்குமரன்(நாம்தமிழர்), 6.நாகஜோதி(த.ந.இ.க), 7.சுல்தான் பாட்ஷா(சுயே), 8.அரசு திருவள்ளுவன்(சுயே), 9.ராமு(சுயே), 10.பிரேம்குமார்(சுயே), 11.கே.சுல்தான்பாட்ஷா(சுயே), 12.அன்புமணிகண்டன் தமிழ்சூரியன்(சுயே), 13.கார்த்திகேயன்(சுயே), 14.வெங்கடேசன்(சுயே), 15.செபாஸ்டியன்(சுயே).

 * திருப்பரங்குன்றம்: 1. பொன்னுத்தாய் (மா.கம்யூ), 2.ராஜன்செல்லப்பா(அதிமுக). 3.டேவிட் அண்ணாத்துரை(அமமுக), 4.சவிதா(ஏஎம்ஜிஆர்டிஎம்கே), 5.பரணிராஜன்(மநீம), 6.முருகேசன்(எம்ஐபி), 7.ரேவதி(என்டிகே). 8.ராஜாமணி(என்எம்கே), 9.சேகர்(சுயே), 10.முருகன்(சுயே), 11.பிள்ளை(சுயே), 12.ராமச்சந்திரன்(சுயே), 13.சங்கர்தயாளுசர்மா(சுயே), 14.மணிகண்டன்(சுயே), 15.இளங்கோவன்(சுயே), 17.கருணாகரன்(சுயே), 18.ஆறுமுகம்(சுயே), 19.பாலமுருகன்(சுயே), 20.பாக்கியசெல்வி(சுயே), 21. ராதா என்ற குணசேகரன்(சுயே), 22.முகைதீன்அப்துல்காதர்(சுயே), 23.உக்கிரபாண்டி(சுயே).

  * திருமங்கலம்: 1.மணிமாறன்(திமுக), 2.ஆர்.பி.உதயகுமார்(அதிமுக), 3.ஆதிநாராயணன்(அமமுக), 4.ஆறுமுகம்(லோக்ஜனசக்தி), 5.ராம்குமார்(மநீம), 6.நிர்மலா(மைஇந்தியா), 7.சரளா(நாம் தமிழர்), 8.மாரிக்கண்ணன்(என்டிபிஎஸ்ஐ), 9.ராஜன்பாபு(சுயே) 10.துரைப்பாண்டி(சுயே), 11.முத்துராஜா(சுயே), 12.முத்துவேல்ராஜா(சுயே), 13.அழகர்சாமி(சுயே), 14.வைர சீமான்(சுயே), 15.ராமமூர்த்தி(சுயே), 16.வீரமணி(சுயே), 17.காளி(சுயே), 18.ஏ.ராமநாதன்(சுயே), 19.என்.ராமநாதன்(சுயே), 20.ஜெகதீஷ்குமார்(சுயே), 21. திரளி பாண்டி(சுயே), 22. வீரணன்(சுயே), 23.சந்திரசேகரன்(சுயே), 24.பாலமுருகன்(சுயே).  

 * உசிலம்பட்டி: 1.கதிரவன்(திமுக), 2.அய்யப்பன்(அதிமுக), 3. மகேந்திரன்(அமமுக), 4. அரசு மகிழன்(ஏஐஜேஎம்கே), 5.பரத்(மை இந்தியா), 6.இந்து கோவலன்(நாம் தமிழர்), 7.திருச்செல்வம்(புதிய தமிழகம்), 8.மகேந்திரன்(சுயே), 9.தனசேகரன்(சுயே), 10 அழகு முருகேசன்(சுயே), 11.ஏ.கதிரவன்(சுயே), 12. ஆனந்தகுமார்(சுயே), 13. ஆறுமுகம் (சுயே), 14.அருண்குமார்(சுயே).

Related Stories:

>