×

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல், மார்ச் 23: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் நேற்று கொரோனா தடுப்பு சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சியாம் வேதமாணிக்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் கூறியதாவது: இந்த மார்ச் மாத ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் கொரோனா தொற்று சம்பந்தமாக தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றப்படாமல் அலட்சியமாக இருப்பதே. தமிழக அரசு வலியுறுத்தி வரும் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளி யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 தமிழக அரசு ஆர்டிபிசிபி பரிசோதனை இலவசமாக செய்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது நமது கடமையாகும் என்றார். இந்த கூட்டத்தில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், சீலப்பாடி ஊராட்சி தலைவர் மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்பு பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 40 நபர்களுக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது.

Tags : Corona Prevention Awareness Meeting ,
× RELATED ஆய்க்குடி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்