×

தட்டான்குளத்தில் சித்த மருத்துவ கல்லூரி நிச்சயம் துவக்கப்படும் பழநி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் உறுதி

பழநி, மார்ச் 23: பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி நிச்சயம் துவக்கப்படும் என திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி அளித்தார். பழநி தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ நேற்று பழநி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கலிக்கநாயக்கன்பட்டி, முல்லை நகர், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசுகையில், ‘‘பழநி புறநகர், சிவகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குளத்தில் சித்த மருத்துவக் கல்லூரி திமுக ஆட்சியில் நிச்சயம் துவக்கப்படும். நீண்டகால கோரிக்கையான புதுதாராபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தரப்படும். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் குடியிருப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும். சுயதொழில் மேற்கொள்ள மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். கோதைமங்கலத்தின் குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்படும்.
அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் தமிழகம் சுமார் 5 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிகாலத்தில் மாநிலத்தின் வருவாயை அதிகரித்து கடன்களை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Palani ,DMK ,IP ,Senthilkumar ,Siddha Medical College ,Thattankulam ,
× RELATED பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு