மேச்சேரி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி திமுக வேட்பாளர் வாக்குறுதி

மேட்டூர், மார்ச் 23:மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீனிவாசபெருமாள், நேற்று மேச்சேரி ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 8 மணிக்கு செங்காட்டூர் பிரிவு சாலையில் தனது பிரசாரத்தை துவக்கினார். அங்கு கிராமமக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், அதிர்வேட்டுகள் முழங்கவும் வரவேற்பு அளித்தனர். பாணாபுரம் காலனியில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சாத்தப்பாடி, அத்திமரத்தூர், மாமரத்தூர், செம்மனூர், சிந்தாமணியூர், ஓலைப்பட்டி, பனங்காடு, குக்கப்பட்டி உட்பட 55 கிராமங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாளுக்கு கிராமங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்

பட்டது. திறந்த வேனில் வாக்கு சேகரித்த சீனிவாச பெருமாள் பேசுகையில், ‘கிராமங்களில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும். சாலை வசதிகள் செய்து தருவதோடு, அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்யப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை நேரில் சந்திக்கலாம். அவர்களின் குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேரில் வரமுடியாதவர்கள் தொலைபேசியில் தகவல் அளித்தால், நானே வந்து சந்தித்து, குறைகளை தீர்த்து வைப்பேன்,’ என்றார்.

பிரசாரத்தின்போது, மேச்சேரி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் காசிவிஸ்வநாதன், பேரூர் திமுக பொறுப்பாளர் சரவணன், கூணாண்டியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாகண்ணு, கம்யூனிஸ்ட் நிர்வாகி ரத்தினவேலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>