விடுமுறை நாட்களில் சேலம் அண்ணா பூங்காவில் மாலை 4 மணி வரை அனுமதி மாநகராட்சி கமிஷனர் தகவல்

சேலம், மார்ச் 23: சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பு விதிகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதிப்பிக்கப்பட்டு மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள சேலம் அண்ணா பூங்காவில் அனைத்து நாட்களிலும், காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நலன் கருதி, இனி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள், தவறாது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பூங்காவிற்குள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>