×

அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள் வெங்கடாஜலம் எம்எல்ஏ பிரசாரம்

சேலம், மார்ச் 23:  சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, நேற்று காலை 13வது வார்டு பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செம்மலை எம்எல்ஏவும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மாலை 14வது டிவிசன் சங்கர்நகர், மேயர் நகர், ராஜாராம்நகர், வின்சென்ட் ஆகிய ஆகிய பகுதிகளில் மேளதாளம் முழங்க வேட்பாளர் வெங்கடாசலம், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். அதிமுக  தேர்தல் அறிக்கையில் கூறியது போல, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் தோறும் ₹1500 வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 6 விலையில்லா காஸ் சிலிண்டர் வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் தள்ளுபடி, திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்சை திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் வழங்கப்படும். எனவே அதிமுக அரசின் நலத்திட்டங்கள் உங்களுக்கு கிடைக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்,’ என்றார். பிரசாரத்தின் போது, பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், வார்டு செயலாளர் கலை, பாமக மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், பூபதி, பாஜக மண்டல தலைவர் கரிகாலன், முரளிதரன், தமாகா விஷ்ணுகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வாக்கு சேகரித்தனர்.


Tags : AIADMK ,Venkatajalam ,MLA ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை