×

நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் தீமிதி விழா

பரமத்திவேலூர், மார்ச் 23:
நன்செய் இடயாறு மகாமாரியன் கோயில் தீமிதி விழா நேற்று நடந்தது. பெண்கள் தங்கள் தலையில் நெருப்பை அள்ளி போட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். பரமத்திவேலூர் அடுத்த நன்செய் இடையாறு மகாமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா, கடந்த 7ம்தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நேற்று நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் தலையில் நெருப்பு கங்குகளை வாரிக்கொட்டிக்கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் இன்று (23ம்தேதி) பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிள் நடைபெறும். இதேபோல் மாவுரெட்டி, பில்லூர், கீழ்சாத்தம்பூர் பிள்ளைக்கத்தூர், சூரியாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயிலில்களில் பண்டிகை நடைபெற்றது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பொங்கல் மற்றும் கிடா வெட்டுதல், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

Tags : Nansei Idayaru Maha Mariamman Temple Timithi Festival ,
× RELATED ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா