காங்கயம் வடக்கு ஒன்றிய பகுதியில் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரிப்பு

காங்கயம்,மார்ச்23: காங்கயம் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னால் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறார் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் காங்கயம் தொகுதிக்குட்பட்ட காங்கயம் வடக்கு ஒன்றிய பகுதியில் உள்ள, நெய்காரன்பாளையம், சகாயபுரம், காந்தி நகர், வரதப்பகவுண்டன்புதூர், குப்பகவுண்டன்வலசு, ஆண்டிமடக்காடு, ஆலாம்பாடி, கல்லோரி, சென்னிமலைகவுணடன்வலசு, கலைஞர் நகர், காமட்சி புரம், செம்மங்குழிபாளையம், திட்டம்பாளையம், மரவபாளையம், மொசுக்குத்திவலசு, தாமரைக்காட்டு வலசு, பாரவலசு, குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள கிராமத்திலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது தமிழகத்தின் விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம் போன்றிற்கு முக்கியத்தும் தரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர்சந்தை, ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு, என பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கியது திமுக அரசுதான். அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்ற பகுதிகளில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.

Related Stories:

More
>