×

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல்

திருப்பூர், மார்ச் 23: திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிக்கும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால், பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி, செட்டிபாளையம் பகுதியில் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்த ஹரீஸ், ஹபீப் இருவரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து திருப்பூரில் உள்ள கடைகளுக்கு ஏலக்காய் விற்பனை செய்ய வந்ததாக தெரியவந்தது. மேலும், அவர்களிடம் ரூ.4 லட்சம் இருந்தது.  இவற்றிற்காக ஆவணத்தை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதன் காரணமாக ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பணம் வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து பின்னர் கருவூலத்தில் சேர்த்தனர். இது தொடர்பான ஆவணத்தை கொடுத்து விட்டு, பணத்தை பெறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Tags : Tiruppur ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...