×

கோத்தகிரி அருகே அடிப்படை வசதி செய்து தராததால் போராட்டம்

குன்னூர், மார்ச் 23: கோத்தகிரி கட்டபெட்டு அருகே சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டபெட்டு அருகே சக்திநகர் கிராமம் உள்ளது. இங்கு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் 500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்கவில்லை. இதுதவிர, மின் வசதி, கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இது  குறித்து பலமுறை புகார் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் செய்து தராததால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Kotagiri ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்