×

திமுக ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம்

திமுக ஆட்சிக்கு வந்தால்
சிஏஏ சட்டத்தை
அமுல்படுத்த மாட்டோம்
கோவை, மார்ச் 23:  கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் நேற்று சாரமேடு பகுதியில் பிரசாரத்தை துவக்கினார். சாரமேடு, பூங்காநகர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், ராஜீவ்  நகர், இலாஹிநகர், வள்ளல் நகர், சலாமத்நகர், பாத்திமாநகர், ஆப்பிள் கார்டன்  உள்ளிட்ட பகுதிகளில் நா.கார்த்திக் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பல தோல்விகளை கண்டுள்ள அதிமுக, பாஜவுடன் போட்டியிடுகிறது. பூங்காநகர் பகுதியில் புதிய வடிநீர் வடிகால் அமைக்க வேண்டும் என பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலி–்ருந்து இப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட 10 லட்சம் ரூபாய் வழங்கினேன். அதில் கூட, அதிமுகவினர் பல்வேறு இடையூறுகளை செய்தனர். அமைச்சர் வேலுமணியும், அவரது சகோதரர் அன்பரசனும் என்னை மக்கள் பணி செய்ய விடாமல் செய்தார்கள். சூயஸ் என்ற குடிநீர் ஒப்பந்தம், பாதாள சாக்கடை திட்டம், சிதிலம் அடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளில், 100-க்கும் மேற்பட்ட முறை பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். திமுக ஆட்சி காலத்தில்தான் இந்த பகுதியில் முறையற்ற வீட்டு மனைகள் அப்ரூல் செய்து கொடுக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை செயல்படுத்தவில்லை. எந்த வேலை கொடுத்தாலும் அதை தடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருந்து வந்தது. மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக உறுதியாக வருவார். உங்களின் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இந்திய குடியுரிமை சட்டத்தை நாங்கள் அமுல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம். சிறுபான்மை மக்களுக்காக என்றும் குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. என்.ஆர்.சி சட்டங்களை எதிர்ப்போம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிஏஏ சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின்போது, பகுதி கழக பொறுப்பாளர்கள் ஷேக் அப்துல்லா, பக்ரூதின், பொதுக்குழு உறுப்பினர் முமாச முருகன், காங்கிரஸ் சார்பில் ரகமத்துல்லா, விசிக விடுதலை அன்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மாலையில் 74-வது வார்டு பாரதி நகர் பகுதியில் பிரசாரம் செய்தார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு