×

பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு “தென்னந்தோப்பு சின்னம்” மக்கள் உற்சாக வரவேற்பு

ஈரோடு, மார்ச் 23:பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று தனது அலுவலகத்திற்கு வந்த தோப்பு வெங்கடாச்சலத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது:பெருந்துறை தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சத்தை போக்குகிற வகையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 75 சதவீதம் பணிகளை நிறைவு செய்து இருக்கிறேன். எனக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் 3 மாத காலத்திற்குள் மீதம் உள்ள பணிகளை முடித்து உங்களுடைய இல்லம் தேடி தண்ணீரை கொண்டு வந்து சேர்ப்பேன்.
அவினாசி அத்திக்கடவு திட்டத்திற்காக சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் குரல் கொடுத்துள்ளேன். தற்போது நடைபெற்று வரும் மீதமுள்ள பணிகளை நேரடியாக சென்று தினமும் ஆய்வுசெய்து, குழாய் பதிக்கப்படும் போது ஏற்படும் நடைமுறை பிரச்னைகளை அவ்வப்போது சரி செய்து, இத்திட்டத்திற்காக நாளும் நான் உழைத்து வருகிறேன். கடந்த 40 ஆண்டு காலம் கட்சியை பெருந்துறை தொகுதியில் கட்டிக்காத்த என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். மக்களாகிய நீங்கள் உண்மையான உழைப்பு என்னும் விதைக்கு வெற்றி எனும் பலனை தரவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தோப்பு வெங்கடாச்சலம் இன்று முதல் தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார்

Tags : Thoppu Venkatachalam ,Perundurai ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு