×

பூந்தமல்லி தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன்: திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி ேபச்சு

திருவள்ளூர், மார்ச் 23: பூந்தமல்லி ஒன்றியம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய திமுக செயலாளருமான பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், பூக்களைத் தூவியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், “இந்த தொகுதியில் மீண்டும் நீங்கள்தான் எம்எல்ஏ. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்” என கூறினர். அப்போது திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி பேசியதாவது, “பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக பல்வேறு நலத்திட்டப்பணிகளை செய்துள்ளேன்.இந்த தொகுதி பிரசனைகள் குறித்து சட்டமன்றத்தில் பலமுறை பேசி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். மேலும் பல திட்டங்களை கொண்டு வந்து முன்மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும். அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். தொகுயில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்யுங்கள்.

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் என்னுடைய எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், ₹4 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவரும் கட்டிக்கொடுத்துள்ளேன். இந்தப்பகுதியில் பழுதடைந்த 90 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.முதற்கட்டமாக 15 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் அந்தப்பணிகள் முடிவடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். மேலும் சாலை வசதி, கால்வாய் வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளேன்,” இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரசாரத்தில் மதிமுக ஒன்றிய செயலாளர் மணி, விசிக ஒன்றிய செயலாளர் கருணா, திமுக நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், இளையான், ஏ.ஜி.ரவி, சுமதிகுமார், ஏ.ஆர்.பாஸ்கர், பா.ச.கமலேஷ், ராம்பாபு, குமரேசன், ராஜாராம், சங்கர், கவுன்சிலர் வி.கன்னியப்பன், கே.ஜி.பாலமுருகன், கேஜிஆர்.ஸ்டாலின், சிவசங்கர், வேதகிரி, மதன், சுப்பையா, தியாகு, செந்தமிழ், கன்னியப்பன், வினோத், அரி, திலீப், சுபாஷ், பி.ஜி.கிருஷ்ணன், விமலா அன்பு, அருண்குமார், நடேசன், ரமேஷ், ஹேமாவதிஸ்டாலின், தமிழ்ச்செல்வி, பாரதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Poonamallee ,DMK ,A. Krishnasamy ,
× RELATED பரிவாக்கம் சந்திப்பு,...