×

வீடுகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர்: டி.கே.எம்.சின்னையா வாக்குறுதி

சென்னை, மார்ச் 23: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா நேற்று மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அப்போது, அமைச்சராக இருக்கும்போது செய்த பணிகளையும், தாம்பரம் நகர செயலாளராக, தாம்பரம் நகர மன்ற உறுப்பினராக இருந்த போது செய்த பணிகளையும் எடுத்துரைத்தார். இன்றைக்கு பல்வேறு திட்டங்களை எடப்பாடி அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் தாம்பரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.

தாம்பரம் நகராட்சியில் 95 விழுக்காடு பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணியை விரைந்து முடித்து கொடுக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிப்பு குடிநீர் இணைப்பு வழங்கப்படும், என்று வாக்குறுதி அளித்தார்.
பிரசாரத்தின் போது அதிமுக நகர செயலாளர் கூத்தன், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், நகர மன்ற முன்னாள் துணை தலைவர் கோபிநாதன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாகூர் ஹனி, பரசுராமன், எட்வர்ட், சேலையூர் சங்கர் மற்றும் கோபி, மாரி, தயாளன், காத்தவராயன், தாம்பரம் பெருநகர மேற்கு பகுதி தலைவர் குருநாதன், எடிசன், ராஜா, சூரிய நாராயணன், பாமக விநாயகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : D. Q. ,M. Isco ,
× RELATED பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்: டி.கே.எம்.சின்னையா பிரசாரம்