பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்: மரகதம் குமரவேல் உறுதி

மதுராந்தகம், மார்ச் 23: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் நேற்று மதுராந்தகம் நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்குந்தர்பேட்டை, ஆனந்தநகர், கடப்பேரி, சாத்தனூர், காந்திநகர், மாம்பாக்கம், மோச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அடங்கிய 24 வார்டுகளில் திறந்த வேனில் நின்றபடி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக நகர செயலாளர் ரவி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், சித்தப்பா கிருஷ்ணன், பன்னீர், சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் சீனிவாசன், மாணவர் அணி நிர்வாகி ஆனந்த், பாமக நிர்வாகிகள், மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் வ.கோபாலகண்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆ.கோ.குணசேகரன், ராஜா, சந்தோஷ், சகாதேவன், பாஜ கட்சியை மாவட்ட செயலாளர் தயாளன்,  நகர தலைவர் சம்பத், நகர செயலாளர் தினகரன், தமாகா நகர தலைவர் ஜெயஜெயந்த், நகர செயலாளர் குமார், வட்டார தலைவர்கள் ஆதிகேசவன், பழனி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது, 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வேட்பாளருடன் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர். பொதுமக்கள் மத்தியில் மரகதம் குமரவேல் பேசுகையில், ‘இந்த நகரில் பொதுமக்களின் மிக முக்கிய பிரச்னையான கழிவுநீர் பிரச்னை காலங்காலமாக தொடர்ந்து கொண்டு உள்ளது. இதனை போக்க பல தரப்பினரும் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என செல்லுமிடங்களில் கோரிக்கை வைக்கின்றனர். நான் வெற்றி பெற்றதும் உங்களின் முக்கிய கோரிக்கையான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை அரசின் உதவியோடு நிறைவேற்றி தருவேன்’ என்றார்.

Related Stories:

>