×

திருப்போரூர் தொகுதியில் 11 பேர் போட்டி

திருப்போரூர், மார்ச் 23:  திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்று முடிவடைந்தது. திருப்போரூர் தொகுதியில் 19 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் தள்ளுபடி செய்தது போக 12 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன.

  இந்நிலையில் புதிய தலைமுறை மக்கள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்திருந்த பொன்பத்திர செல்வசுதா என்பவர் நேற்று தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து வி.சி.க., பா.ம.க., அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மையம், பகுஜன் சமாஜ் ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், 5 சுயேச்சை வேட்பாளர்களும் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். திருப்போரூர் தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக நேற்று மாலை தேர்தல் அலுவலர் சுப்ரமணியன் அறிவித்தார்.

Tags : Thiruporur constituency ,
× RELATED திருப்போரூர் தொகுதியில் தபால்...