×

அடிப்படை வசதிகள் இல்லை தங்கம்மாள்புரம் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஸ்பிக்நகர், மார்ச் 23: தங்கம்மாள்புரம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்பிக் நகரை அடுத்துள்ள தங்கம்மாள்புரத்தில் கழிவுநீர் வடிகால் வசதி, தெருவிளக்குகள், பொதுக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தங்கம்மாள்புரம் பகுதி மக்கள் அறிவித்தனர். இதனையடுத்து மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் மற்றும் முத்தையாபுரம் காவல்துறை ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் அடிப்படை வசதிகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஆர்ஐ ராதிகா, விஏஓ பாலமுருகன், தங்கம்மாள்புரம் ஊர் தலைவர் சிவலிங்கம், செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் மலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thangammalpuram ,People Election ,
× RELATED முத்தையாபுரத்தில் தொழிலாளியை மிரட்டிய 2 பேர் கைது