தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

தூத்துக்குடி,மார்ச் 23: தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு நாகம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த அன்னராஜ் மகன் கனகராஜ் (29) மற்றும் தெற்கு கோனார்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலை (52). இவர்கள் இருவரும் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி வெள்ளாளன் கோட்டை சாலை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி. ஜெயக்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை கயத்தாறு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழங்கினார்.

Related Stories:

>