கொக்கிரகுளம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெரால்ட் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு

நெல்லை, மார்ச் 23:  பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்ட் நேற்று கொக்கிரகுளம் மற்றும் மேலப்பாளையம், குறிச்சி பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்ட் தொகுதி முழுவதும் உள்ள மக்களை சந்தித்து தினமும் காலை, மாலையில் வாக்கு கேட்டு வருகிறார். நேற்று காலை கொக்கிரகுளம், குறிச்சி மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு, கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம் மற்றும் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை சுட்டிக்காட்டி மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்பி முருகேசன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மகபூப்ஜான், நெல்லை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் கவிதா, பகுதி செயலாளர் சிந்து முருகன், மேலப்பாளையம் பகுதி மாணவரணி செயலாளர் ஜான்சன் செல்வகுமார், மேலப்பாளையம் கிழக்கு பகுதி பொருளாளர் டக்கரம்மாள்புரம் சேகர், நத்தம் வெள்ளப்பாண்டி, மாநில பேச்சாளர் முருகன், நல்லபெருமாள், தொண்டன் ஆறுமுகம், வட்ட செயலாளர் வெள்ளப்பாண்டியன், வக்கீல் பாலசுப்பிரமணியன், நைனாமுத்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர், கொக்கிரகுளம் பகுதியில் டீக்கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலப்பாளையம் பகுதிகளிலும் ெஜரால்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Related Stories:

>