×

நாங்குநேரி தொகுதியில் நடமாடும் பதநீர் கொள்முதல் நிலையம்

நெல்லை, மார்ச் 23:  நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா களக்காடு மாவடியில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சூரங்குடி கஸ்பா, கடம்ேபாடு வாழ்வு, கோதைசேரி, சுப்பிரமணியபுரம், டோனாவூர், புளியங்குளம், தோப்பூர், சாலைபுதூர், திருக்குறுங்குடி கஸ்பா, ராஜாபுதூர், தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது ‘‘நாங்குநேரி, களக்காடு சுற்றுவட்டாரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பனை தொழில் செழித்திருந்தது. சித்திரை முதல்நாளில் கிராமங்கள் தோறும் பதநீர் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

பனை தொழிலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக பனை தொழிலை மேம்படுத்தும் வகையில் நவீன பனையேறும் கருவிகள் மானிய விலையில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பதநீரை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் பதநீர் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
ஆவின் மூலம் கால்நடைகள் வழங்கவும், அதிமுக அரசின் சாதனை திட்டங்களில் ஒன்றான இலவச ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் அதிகமான பயனாளிகளை தேர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்குநேரி- களக்காடு இடையே கூடுதலாக டவுன் பஸ், நெல்லை- டோனாவூர்- களக்காடு இடையே கூடுதலாக இரவு நேர பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவடி, ராஜாபுதூர், திருக்குறுங்குடி, மலையடிபுதூர் கிராமங்களில் உற்பத்தியாகும் செங்கல், மண்பாண்ட பொருட்கள் தொழில்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்லும் வழியில் வனத்துறை மூலம் இயற்கை சுற்றுசூழல் பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் முருகேசன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் களக்காடு ஜெயராமன், பூவரசன், நாங்குநேரி விஜயகுமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் குபேந்திரா மணி, நகர செயலாளர்கள் களக்காடு செல்வராஜ், ஏர்வாடி பாபு முருகன், திருக்குறுங்குடி முருகன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், அத்திமேடு லட்சுமிகாந்தன், கூட்டுறவு தலைவர்கள் காந்தி நம்பி, இளங்காமணி, செல்வக்குமார், வேல்சாமி, கதிர்வேல் தாஸ், ஆலோஷ்ண ஸ்டாலின், ஐசக் சாலமோன், பாஜ சார்பில் ஒன்றிய தலைவர் ராமேஷ்வரன், செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Mobile ,Pathanir ,Procurement Station ,Nanguneri ,
× RELATED 2023ம் ஆண்டு காணாமல் போன ரூ.23 லட்சம்...