×

ஒத்தக்கடை, புத்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 23: ஒத்தக்கடை, புத்தூர் பகுதியில் திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், முதன்மை செயலாளருமான கே.என்.நேரு நேற்று காலை 54, 44 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரித்தார். அதன்படி புத்தூர் நான்கு ரோடு, அக்ரஹாரம், ஒத்தக்கடை, ராமலிங்கநகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்றபடியும், சில பகுதிகளில் வீதி வீதியாக நடந்தும் சென்றும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் நின்று கே.என்.நேருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக வேட்பாளர் கே.என்.நேருவுடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : DMK ,KN Nehru ,Ottakkadai, Puthur ,
× RELATED மக்களவைத் தேர்தல்: திமுக தொகுதி...