×

கலெக்டர் சிவராசு பேட்டி கலெக்டர் தகவல் நெட்டவேலம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால் அமைக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

துறையூர், மார்ச் 23: துறையூர் அருகே நெட்டவேலம்பட்டி ஏரிக்கு புளியஞ்சோலை ஆற்றில் இருந்து நீர்வரத்து வாய்க்கால் அமைக்கக்கோரி தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெட்டவெலம்பட்டியில் 1,300 குடும்பங்கள் வசித்து வருகிறது. 3,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழக்கூடியவர்கள். இந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கும், 3 குட்டைகளுக்கும் நீர்வரத்து வாய்க்கால் இல்லாததால் புளியஞ்சோலை ஆற்றிலிருந்து நீர் வரத்து வாய்க்கால் அமைத்து தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே இதை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கடந்த 9ம் தேதி கிராமம் முழுவதும் வீட்டுக்கு முன் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். துறையூர் தாசில்தார் செல்வம் சம்பவ இடத்துக்கு வந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு தேர்தலில் வாக்களிக்குமாறு கூறினார். அதற்கு எங்களது கோரிக்கையை கைவிட்டு விட்டால், நீர்வரத்து வாய்க்கால் அமைவது கஷ்டம். எனவே நீர்வரத்து வாய்க்கால் அமைத்து தரும் வரை நாங்கள் வாக்களிக்க மாட்டோம், அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : Sivarasu ,Nettavelampatti lake ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள்,...