×

காவிரி உப்பாறு நீர்த்தேக்க திட்டம் செயல்படுத்தப்படும்

மண்ணச்சநல்லூர், மார்ச் 23: மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி போட்டிடுகிறார். இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி  தான் வெற்றி பெற்றால் அய்யம்பாளையம், ஏவூர், ஆமூர், குணசீலம் ஊராட்சியில் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன். காவிரி உப்பாறு நீர்த்தேக்க  திட்டம் செயல்படுத்தப்படும். நொச்சியத்தில் இருந்து ரங்கத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்.

மண்ணச்சநல்லூர் பகுதியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர், மாணவியர்  விடுதி அமைக்கப்படும். மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் பேருந்து நிலையம் விரிவுப்படுத்தப்படும்.

மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம்  லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை பைப்லைனும் அமைக்கப்படும். உளுந்தங்குடி பெருவளை வாய்க்கால் மற்றும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைக்கப்படும் உட்பட 20 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...