மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி மலைக்கோட்டை பகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 23: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். இவர் நேற்று காலை 10, 11, 12வது வார்டுகளுக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதிகள், சறுக்குபாறை, என்எஸ்பி ரோடு போன்ற பகுதிகளில் வேனில் நின்றபடி பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வாக்குகள் சேகரி–்த்தார். அவர் சென்ற இடமெல்லாம் ஏராளமானோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வேட்பாளர் வாக்கு சேகாிப்பின்போது மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், முன்னாள் எம்பி ரத்தினவேல், சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் சென்றனர்.

Related Stories: